செங்கலடி பதுளை வீதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன நவ குண்டபட்ஷ மகா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா!!

 


வரலாற்று சிறப்புபெற்ற மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி   ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன நவ குண்டபட்ஷ   மகா கும்பாபிஷேக  திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழாவின் முதல் நாள் புதன்கிழமை(09)  எண்ணெய்க்காப்பு நடைபெற்றது.  இதன்போது சுகாதார நடைமுறையை கடைபிடித்து ஆலயத்துக்கு எண்ணைகாப்பு சாத்துதலுக்குவருகை தந்த பக்தர்கள்  இடம்பெற்ற யாக பூஜைகளில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். 



 இதன்போது விநாயகர் வழிபாடு விசேட திரவ்விய யாகம் மற்றும் பிரசாதம் வழங்குதல் என்பன இடம் பெற்றது.  ஆலயத்தின் நிர்வாக சபையினரால்  சிறப்பான முறையில் எண்ணைக்காப்பு சாத்துதல்  ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றதுடன் இதன் போதும் பெருமளவான பக்தர்கள் வருகைதந்து எண்ணெய்க்காப்பு சாத்தினர். வியாழக்கிழமையும் (10)  எண்ணைக் காப்பு சாத்துதல் இடம்பெறவுள்ளது.



 யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் தேவஸ்தானத்தின் சிவஸ்ரீ ஐ கயிலை வாமதேவ குருக்கள் தலைமையில் இடம்பெற்றுவரும் மகா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழாவின் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.