சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் அறிவிப்பு!!

 


12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொவிட் தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிந்துரையினை வழங்கவுள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம் அறியப்படுத்தியுள்ளது.


இந்தப் பரிந்துரை அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் 1,259 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதற்கமைய, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 625, 804 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 373 பேர் நேற்று குணமடைந்தனர். இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 594, 348ஆக அதிகரித்துள்ளதென  தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 31 பேர் கொவிட்-19 தொற்றினால் நேற்று முன்தினம் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்  இநதத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15, 754 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், 15, 702 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.