பூரண அரச மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்!!

 


கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், உயிரிழந்த இந்திய பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் பூரண அரச மரியாதையுடன் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.


 கொரோனா வைரஸ் தொற்றுறுதியான அவர், மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் அவரது உடல் நிலை மோசமடைந்ததாக வைத்தியசாலை தரப்பினரால் அறிவிக்கப்பட்டது.


இந்தநிலையில் இன்று காலை 8.12 அளவில் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பினர் அறிவித்துள்ளனர். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார்.


அதேநேரம், அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.