உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்!!

 


நேற்று ரஷ்ய பாராளுமன்றத்தில்  உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷ்யா.


உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இதனால் எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.


டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இது நாடு முழுவதும் அடங்கும். இந்த உத்தரவு 30 நாட்கள் அமுலில் இருக்கும். அதன்பின் நீடிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.