இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது!!

 


நேற்றைய தினம் இரவு  அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 இதன்போது ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. 


காரைநகர் - கோவளம் கடற்பரப்பில் குறித்த கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர். 


கைது செய்யப்பட்டவர்களையும், படகினையும் கடற்படையினர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.