பிக்குவுக்கு விளக்கமறியல்!!

 


வட்டவளை, டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் பௌத்த பிக்குவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த இன்று உத்தரவிட்டார்.


வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரையில் வைத்தே கடந்த 20 ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனவும், 21ஆம் திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார் எனவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.


இதையடுத்து 21ஆம் திகதி மாலை வட்டவளைப் பொலிஸாரால் பௌத்த பிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார். 


சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், பௌத்த பிக்குவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி குறித்த தோட்டத்தில் பொதுமக்களால் போராட்டம் ஒன்றும் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், குறித்த பிக்கு இன்று பொலிஸாரால் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் குறித்த பிக்குவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.