பாரதி நினைவுகள்!!
சொல்லுக்கு
மகுடஞ் சூட்டிச்
சுதந்திரங் கொடுத்தவன்
******
கம்பீர மீசையைக்
கவிதையில் வளர்த்து
அழகு பார்த்தவன்
******
சொற் குண்டுகள் வீசி
வெள்ளையர் மனக் கோட்டையைத்
தகர்த்தவன்
******
புதியன பாடியும்
வேட்டுக் கவிதை யாத்தும்
மகாகவி ஆனவன்
******
பாரதத்தின் புதல்வரென
பாரத விலாசம்
காட்டியவன்
******
தனியொருவன்
பசியென இருப்பின்
சகத்தினை அழிக்க
ஆவேசமூட்டியவன்.
******
காண்பதெலாம் பெருங் கனவோ
எனத் தத்துவம்
பார்த்தவன்
******
எத்தனை கோடி இன்பம்
இப்பூமியில் என்று
எம் கண்ணில் சேர்த்தவன்
******
ஆனந்தச் சுதந்திரம்
அடைவதைத்
தீர்க்கதரிசியாய்
எமக்குக் காட்டியவன்
******
பாரதி நீ
வெறுங்கவி அல்ல
மண்ணின் பெருங்கவி
இப்பிரபஞ்சத்தின்
மகாகவி.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை