முட்டாள்கள் தினத்தில் ரிலீஸ் ஆகும் 'இடியட்'

 


ஏப்ரல் 1ஆம் தேதி ‘இடியட்’என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மிர்ச்சி சிவா மற்றும் நிகில் கல்ராணி நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘இடியட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தயாராக இருந்தது என்பது தெரிந்ததே.


இந்த நிலையில் உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் என கொண்டாடப்படும் ஏப்ரல் 1ஆம் தேதி ‘இடியட்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.


விக்ரம் செல்வா இசையில், ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவில், செஞ்சி மாதவன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ரெடின் கிங்ஸ்லே, அக்ஷரா கவுடா, ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, உள்பட பலர் நடித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.