செல்வி ஜெயலலிதாவும் என்னுடைய வடிவமைப்பும்-ஓவியர் புகழ்!


எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது பல்வேறு வடிவமைப்பு (Design) பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அந் நேரத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள், ஆடம்பரத்தை மட்டுமே விரும்புபவர், எல்லாவற்றிலும் தன்னுடைய ஒளிப்படம் இருக்கவேண்டும் என்று நினைப்பார் போன்ற கற்பிதங்கள் உருவாக்கப் பட்டு இருந்தன. நானும் அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்... 

மாநாட்டில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கான வெவ்வேறு நிலைகளில் நினைவுப் பரிசு கேடயம்,  வெவ்வேறு நிலைகளில் அடையாள சின்னங்கள், விளம்பரங்கள், அழைப்பிதழ் போன்ற பல்வேறு வடிவமைப்புகளை எவ்வித சமரசமும் இல்லாமல் செய்தேன். குறிப்பாக அதில் என்ன இடம்பெற வேண்டுமோ அதை மட்டும் குறியீடுகளாகப் பயன்படுத்தியிருந்தேன். அனைத்தும் என்னுடையத் தேர்வுதான். எதிலும் அவர் ஒளிப்படம்  இடம்பெறவில்லை. அவர் ஒப்புதல் இல்லாமல் எந்த வடிவமைப்பையும் பயன்படுத்த முடியாது. அனைத்தும் அவர் ஒப்புதலுக்குச் சென்றன. எந்த மாற்றமும் இல்லாமல் ஒப்புதல் அளித்தார். ஆனால் உன்னிப்பாக கவனித்திருந்தார். எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. பலர் கூறியக் கூற்று அந்த விடயத்தில் பொய்த்துப் போனது.


அதன் பிறகு அந்த வடிவமைப்புகள் அதற்குரிய பொருளாக செய்வதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டபோது, பலருக்கும் வியப்பு. பலர் நம்பவும் இல்லை. ஏனென்றால் எதிலும் அவர் ஒளிப்படம் இல்லை என்பதோடு, மிக எளிமையாகவும் இருந்தது. 


அவர் அதைதான் விரும்புவார் என்று பலரும் அதுபோல் செய்து, இவர்களுடைய விசுவாசத்தை காட்டிக் கொள்வதற்காக செய்தார்கள்...   அதிகாரிகள் அரசியல்வாதிகள் வடிவமைப்பாளர்கள் எல்லோருமே அதில் அடக்கம்.  சிலர் அதில் விதிவிலக்கு... 

செல்வி ஜெயலலிதா அவர்கள் குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை கூறும் போது என்னுடைய அனுபவத்தை நான் கூறுவதுண்டு... என்னுடைய அனுபவம் வேறுபட்டதாகவே இருந்தது. திருப்தியாகவும் இருந்தது.

ஓவியர் புகழ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.