இலங்கையில் காதலர் தினத்தை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள தடை !


 காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்து காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன (Ajith Rohana) தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தில் காதலிப்பதில் எவ்வித தடையும் இல்லை. எனினும் போதைப்பொருள் விருந்து மற்றும் முகநூல் விருந்து நடத்தினால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னர் காதலர் தினங்களில் முகநூல் விருந்து மற்றும போதை பொருள் விருந்துகள் பல சுற்றிவளைக்கப்பட்டன. இதனால் இம்முறை அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த விருந்துகளை சுற்றிவளைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் அதிகமாக இளம் வயதினருக்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றது.

இதனால் பெற்றோர் தங்கள் மகள் மகன் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரி அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார். அது மாத்திரமின்றி பெப்ரவரி 14ஆம் திகதி முகநூல் விருந்துகளையும் நடத்துவதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி ‘காதலுக்கு ஒரு மரம்’ என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டும் காதலர் தினத்திற்காக இதேபோன்ற மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அன்றைய தினம் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.