சில வருடங்களில் அதிகரிக்கவுள்ள இந்தியாவின் பொருளாதார மதிப்பு!!
இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2025-26 ஆம் நிதியாண்டில் 5 ட்ரில்லியன் டொலரை எட்டும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து டெல்லியில் பேசிய அவர், அந்நிய செலாவணி மதிப்பு விகிதத்தின் போக்கு, வளர்ந்த நாடுகளில் உள்ள நிலைவரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்திய ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகவும், வலுவாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 8 முதல் 9 சதவீதமாக தொடர்ந்து வைத்துக் கொண்டால், டொலர் மதிப்பில் 8 சதவீத வளர்ச்சியை காணலாம் எனவும் அவர் கூறினார்.
இந்த போக்கு தொடர்ந்து நீடித்தால் 2025-26 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார மதிப்பு 5 ட்ரில்லியன் டொலரை எட்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை