நூறைத் தொடும் பாடலாசிரியருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

 


வடமராட்சி கிழக்கில் முதல் முறையாக வரலாறு படைக்கும் "நூறைத் தொடும்" பாடலாசிரியர் எழுச்சிக்கவி யாழ் மருதன் அவர்களுக்கு மூத்த கலைஞர்களால் மதிப்பளிக்கும் நிகழ்வு உப்புக்காற்றின் இசைத் திறவுகோல் ஊக்கி அமைப்பின் ஏற்பாட்டிலும், தமிழ்த் தேசிய பேரவையின் அனுசரணையிலும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் 19.02.2022 இடம் பெற்றது. நிகழ்விற்கான மங்கல விளக்கை குருமுதல்வர் ஏற்றி வைக்க, அதனைத் தொடர்ந்து  ஈழத்து மூத்த பாடகியான பார்வதியம்மா, ஈழத்து மூத்த பாடகர் சுகுமார் அப்பா, ஈழத்து கவிஞர் புதுவை அன்பன் அவர்கள், அறிப்பாளர்கள் திருமாறன் மற்றும் கொற்றவை, நிகழ்வின் கதாநாயகன் எழுச்சிக்கவி யாழ் மருதன், வடமராட்சிக் கிழக்கு மூத்த கலைஞர் மற்றும் ஏனைய கலைஞர்கள் ஆகியோர்  மங்கல விளக்கை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்விற்கு பாடகர்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர்கள், வாத்தியக் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்  என பலரும்  வருகை தந்திருந்தனர். 



யாழ் மருதன் அவர்கள் வடமராட்சிக் கிழக்கு, மருதங்கேணி மண்ணில் அவதரித்து தமிழ் மீது கொண்ட பற்றினால் பல்துறை இலக்கணமாக விளங்குகின்றார். சிறு வயது முதல் பல்வேறு திறமைகளில் தன்னை வெளிக்காட்டியவர். கவிதை, சிறுகதை, நாடகம் மட்டுமல்லாது விளையாட்டிலும் திறமையானவர். அதுமட்டுமின்றி, அறிப்பாளர், பேச்சாளர் என்ற பரிணாமங்களைக் கொண்ட யாழ் மருதன் கடந்த 3 வருடமாக பாடல் துறையில் பிரவேசித்து பல பாடல்களை இயற்றி சாதனை படைத்துள்ளார்.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.