வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும் 'பக்ஸ் மிர்ரர்' நிறுவனம்!!

 


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரத்தைச் சேர்ந்த இளைஞர் அமன் பாண்டே, கூகுள் உட்பட நிறுவனங்களின் செயலிகளில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து கோடிக் கணக்கில் சம்பாதித்த வருகிறார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் செயலியொன்றில் பிழைகள் இருப்பதை கண்டுபிடித்து, அதனை கூகுள் நிறுவனத்திடம் அறிவித்திருந்தார்.

அதற்கு அவரை பாராட்டிய கூகுள் நிறுவனம், அவருக்கு 70,000 ரூபா (இந்திய நாணய மதிப்பில்) சன்மானமாக வழங்கியது.

இந்த பணத்தை வைத்து அவர் 'பக்ஸ் மிர்ரர்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

சர்வதேச நிறுவனங்கள் தங்கள் செயலிகளில் உள்ள பிழைகளை கண்டுபிடிக்க அமன் பாண்டேவை நாடுகின்றதுடன், இதற்காக அவருக்கு தக்க சன்மானமும் வழங்கப்படுகிறது.

இதன் மூலம், செல்வந்தராக மாறிய அமன் பாண்டே 'பக்ஸ் மிர்ரர்' நிறுவனத்தை தற்போது பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

“கூகுள் கீழ் இயங்கும் பல்வேறு செயலிகளில் இருந்து சுமார் 600 பிழைகளை கண்டுப்பிடித்துள்ளோம். இதற்காக கூகுள் நிறுவனம் தங்களுக்கு கோடி கணக்கில் பணம் வழங்கியது. கூகுள் போல் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களின் செயலிகளிலும் நாம் பிழைகளை கண்டுப்பிடித்துள்ளோம்.

சர்வதேச நிறுவனங்கள் எமது வாடிக்கையாளர்களாக உள்ளதுடன், தற்போது, இந்திய நிறுவனங்களும் தங்களின் செயலிகளில் உள்ள பிழைகளை கண்டறிந்து திருத்தும் பணிகளுக்காக தம்மை அணுகுவதாக” அமன் பாண்டே தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.