வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்று அடையாளம் காணப்பட்டது!

 


கொழும்பு, வௌ்ளவத்தை கடற்கரை பகுதியில் நேற்று மீட்கப்பட்ட 2 சடலங்களில் ஒரு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடலில் வெட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் மாலைதீவு பிரஜையினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தங்கியிருந்த மாலைதீவை சேர்ந்த 24 வயதான அப்ஹம் நாசீர் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வசித்த மாலைதீவு மாணவரான அப்ஹம் நாசீர், காணாமல் போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.