இலங்கை தமிழ் உதைப்பந்தாட்ட வீரர் மரணம் தொடர்பில் தாயாரின் உருக்கமான கோரிக்கை!!


 மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான டக்ஸன் பியுஸ்லஸ்  நேற்றைய தினம் மாலைத்தீவில் உயிரிழந்திருந்தார். இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி தமிழ் வீரரான  இவர்  உயிரிழந்த செய்தி பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியிருந்தது.


மாலைதீவில் தொழில்சார் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்த போது அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.


இந்நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


‘‘நாட்டுக்கு பெருமை சேர்த்த எனது பிள்ளைக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை என்றும்,மகனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும்,தனது மகனின் மரணத்திற்கு உரிய நீதியினை பெற்றுத்தருமாறும் உயிரிழந்த டக்சனின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.


வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.