நாம் எங்கே போகிறோம் - எதிர்காலத்தில் எதைச் சாதிக்கவுள்ளோம்?

 


ஒரு சமூகத்தின் சீர்கேட்டை நிவர்த்தி செய்யப் போராடும் துணிவு மிக்கவரை அடக்கி அடிபணிய வைக்க முயலும் அரசியல் மாபியாக்களையும், உயர் பதவிகளில் இருப்பவரையும் என்ன வென்பது…..!!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கமலசிங்கம் என்கிற மனித நேயமுள்ள துணிச்சலுள்ள பெண் வைத்தியர்
யாழ் கிளிநொச்சியில் கண்மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து 71 மாணவர்களைக் காப்பாற்றியது தான் அவர் செய்த குற்றமா?????
தர்மபுரம் ஆரம்பபாடசாலையில், கண் பரிசோதனை செய்த, தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று அங்குள்ள மாணவர்களுக்கு கண்ணில் பாதிப்பு என்று கூறி யாழ்ப்பாணத்தில் உள்ள தமது மருத்துவ நிலையத்துக்கு மேலதிக சோதனைகளுக்கு வரச்சொல்லியிருக்கின்றனர்.
ஒரே நாளில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 300 மாணவர்க்கு கண்ணில் குறைபாடு என்றும், அவர்கள் கண்ணாடி பாவிக்க வேணும் என்றும்,குறிப்பிட்ட பாடசாலை அதிபர் ஊடாக,மாபெரும் மருத்துவக் கொள்ளையில் ஈடுபட இருந்தவர்களை ஊடகங்கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினார் டாக்டர் பிரியந்தினி.
இவர் துணிச்சலாக மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்களையும், ஒத்துழைப்பின் மையையும் பொது வெளியில் பகிர்ந்து வருபவர். இவருக்கு இப்போ கொலை மிரட்டல் செய்து வருகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட ஊழலை தடுத்து நிறுத்தி விட்டு,தன் மேலதிகாரிக்கு அறிவித்த போது
அவர் எந்தவித நடவடிக்கையும் எடுகாமல், டாக்டர் பிரியந்தினியை இப்படியான விடயங்களில் இருந்து விலகிக் கொள்ளச் டொன்னாராம்.
இதற்கு டாக்டர் பிரியந்தினி ஒத்துழைக்காததன் பேரிலேயே அடியாட்களை அனுப்பி கொலை செய்ய முட்பட்டுள்ளனர் என்று Ceylon Mirror தெரிவித்துள்ளது.
https://youtu.be/L_-EXn9CPcA
மேலுள்ள லிங்கில் எம்.பி சிறீதரன் டாக்டருடன் பேசி ஒத்துழைப்பு நல்குவதையும், டாக்டர் மிகுந்த நன்றியுடன் தனக்கு நடந்தவைகளை விரிவாகக் கூறுவதைக் கேட்கலாம். கேட்க அதிர்ச்சியாக உள்ளது.
https://youtu.be/-wjWCRCNyRs
இந்த லிங்கில் அவரின் மேலதிகாரி மிரட்டுவதைக் கேட்கலாம்.
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்??
எப்படி நம்பி பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பமுடியும்??
வைத்தியத் துறையில் ஒரு சில மனித நேயம் உள்ளவர்களைத் தவிர எந்தளவு நம்புவது??

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.