பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது KFC!!

 பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் KFC நிறுவனத்தின் கிளை ஒன்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து, காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பதிவு ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டிருந்தது.


அதேபோல் பீட்ஸா (Pizzahutpak) நிறுவனம் நாங்கள் அந்த நிலையுடன் நிற்கிறோம். காஷ்மீர் ஒற்றுமை தினம் எனத் தெரிவித்திருந்தது.


இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் KFCயை புறக்கணிப்போம் என ஹேஷ்டேக் உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ட்விட்டரில் #BoycottKFC மற்றும் #BoycottPizzaHut டிரெண்டிங் ஆனது.


இது KFC நிறுவனத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிளை ஒன்று வெளியிட்டுள்ள பதிவிற்கு KFC நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.KFC வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்து மன்னிக்கக் கூடியது அல்ல. அதை ஆதரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை. நாங்கள் மீண்டும் பெருமையோடு அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் KFC நிறுவனத்திற்கு 450 கடைகளும், பீட்சா ஹட் (Pizza Hut) நிறுவனத்திற்கு 500இற்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.