இன்றைய மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதி!!

 


மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இன்று  மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, A,B,Cஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இந்த வலயங்களில் காலை 8.30 முதல், மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.


மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்கள், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.


இந்த வலயங்களில் காலை 8.30 முதல்,  மாலை 4.45 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.


மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்கள், மாலை 4.45 முதல் இரவு 9.45 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.