இலங்கை போராடி தோற்றது!!

 


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, ஜோஷ் இங்லிஸ் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

165 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலைப்படுத்தியது.

இறுதி ஓவரில் இறுதி 3 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் பெறவேண்டிய இருந்த நிலையில் களத்தில் இருந்த மஹீஷ் தீக்ஷன சிக்ஸர் ஒன்றை விளாசினார்.

அடுத்த பந்துக்கு ஒரு உதிரி ஓட்டம் பெறப்பட்டது.

இதனையடுத்து, ஒரு பந்தில் 5 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்த நிலையில் துஷ்மந்த சமீர பவுண்டரி ஒன்றை பெற்று போட்டியை சமப்படுத்தினார்.

இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சுப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

சுப்பர் ஓவரில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 பந்துகளில் 9 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.