உக்ரேனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

 


உக்ரேனில் இருந்து வெளியேறுமாறு பெருமளவான நாடுகள் தங்களின் பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.


உக்ரேன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கலாமென மேற்கு நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக பெரும்பாலான நாடுகள் தமது பிரஜைகளை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளன.

உக்ரேன் எல்லையில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான துருப்பினரை ரஷ்யா குவித்துள்ளபோதிலும், படையெடுப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்களை மொஸ்கோ தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆக்கிரமிப்பின் விளைவுகள் குறித்து மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.