யார் இந்த ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)!!

 


பலம் வாய்ந்த ரஷ்யாவைக் கண்டு அஞ்சாமல், வீரத்துடன் போர்க் களத்தில் நின்று, நாட்டு மக்களிடம் நம்பிக்கையை விதைத்து வருகிறார்.

1978-ல் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த க்ரிவி ரிஹில் பகுதியில் பிறந்த வொலாடிமிர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy), யூத பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். ரஷ்ய மொழி பேசும் குடும்பத்தைச் சேர்ந்த அவர், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சட்டம் பயின்றார்.

சில காலம் வழக்கறிஞராக பயிற்சி செய்த நிலையில், மேடை நாடகங்கள் பக்கம் ஜெலன்ஸ்கிக்கு(Volodymyr Zelenskyy) கவனம் திரும்பியது.

1995-ல் க்வார்ட்டல் 95 என்ற நாடகக் குழுவை தொடங்கி, உள்நாட்டு அரசியல் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றினார். இவை மிகவும் சீரியசாக இருந்ததால் மக்கள் மனங்களை கவரத் தவறியது.



இதனால், நகைச்சுவை எனும் அஸ்திரத்தை கையில் எடுத்த ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy), நையாண்டி அரசியல் நாடகங்களைப் போட அது பட்டி தொட்டியெங்கும் மக்களை சென்றடைந்தது.தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் இவரது நாடகங்கள் ஒளிபரப்பாக, அதில் நடிக்கவும் தொடங்கினார் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy).

இந்நிலையில் ஒரு நேர்மையான பள்ளி ஆசிரியர், உக்ரைன் அதிபர் பதவிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற கருத்துருவுடன் வெளியான இவரது நாடகத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

அதேசமயம் அரசியல் கட்சிகள் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், நாடகங்களுக்கும் தடை விதித்தன. சற்றும் அச்சம் கொள்ளாத ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy), தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து சர்வண்ட் ஆஃப் தி பீபிள் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

இதன்பிறகு 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், மக்களின் மகத்தான ஆதரவுடன் 73 சதவீத வாக்குகளைப் பெற்று உக்ரைன் அதிபர் ஆனார். ஆரம்பத்தில் ரஷ்யாவுடன் இணக்கமான உறவைப் பேணினாலும், தங்களை அடிமையாகவே ரஷ்யா நடத்துவதை ஏற்க ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)யின் மனம் மறுத்தது.

இதனால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நட்பை நாடினார். இதன்படி ரஷ்ய அதிபர் புடினின் கோபத்திற்கு ஆளானாலும், அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மக்கள் நலனின் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) அக்கறை காட்டினார்.

அந்த அக்கறை இன்றளவும் தொடர்வதால்தான் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy)யின் பக்கம் உக்ரைன் மக்கள் நிற்கின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.