தேசிய பொருளாதாரச் சபைக்கு லயன் எஸ்.ரங்கநாதன் நியமனம்! 


தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குழுவுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவரும் இலங்கையின் முதல்தர தனியார் வங்கியாகிய வணிக வங்கியின் (கொமர்ஷியல் வங்கி) பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கடமையாற்றுகின்ற லயன் எஸ்.ரங்கநாதன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.


லயன் ரங்கநாதன், பங்களாதேஷின் வங்கியாளர்கள் நிறுவனத்தின் பொதுக் குழுவின் உறுப்பினராகவும், இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஸ்தாபகத் தலைவராகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சபையின் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றி வங்கித் துறையிலும் பொருளாதார மேம்பாட்டிலும் நீண்ட அனுபவம் மிக்க ஒருவர்.


சர்வதேச லயன்ஸ் கழக உறுப்பினராக பல்வேறு பதவிநிலைகளை வகித்து, அதனூடாக பாரிய மக்கள்சேவைகளை ஆற்றிவருபவர்.


இவரது பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரேரித்தமைக்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.