மண்ணெண்ணெய் விநியோகம் சீராக்கப்படுகிறது..!
யாழ்.மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு குடும்ப அட்டையின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியும். என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் அறிவித்திருக்கின்றார்.
மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தமக்கு தேவையான மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் மண்ணெண்ணெய் விநியோகம்
இன்று சனிக்கிழமை தொடக்கம் சீராக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களில் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் அடிப்படையில் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தமக்குத் தேவையான நாளாந்த எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை