யாழ்.கொடிகாமம் - இராமாவில் பகுதியில் விபத்து!
யாழ்.கொடிகாமம் பகுதியில் முச்சக்கர வண்டியும் - குளிரூட்டி வாகனமும் மோதி விபத்தக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் கொடிகாமம் - யஆழ்.இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞனே விபத்தில் படுகாயமடைந்த சாரதி ஆவார்.
சாவகச்சேரி பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி மோதியுள்ளது.
இதன் போது முச்சக்கர வண்டி 50 மீற்றர் வரை தள்ளிச் சென்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டி மோசமாக சேதங்களுக்குள்ளானது.
இதன்போதே முச்சக்கர வண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை