28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் இலங்கை வந்தது!!

 


இன்று பிற்பகல் 28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று,  வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நேற்றைய தினமும் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.


அந்த டீசலை, இன்றைய தினத்துக்குள் முத்துராஜவளை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்த முடியும் எனவும் இதையடுத்து, நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் எனவும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


எவ்வாறிருப்பினும், டீசல் இன்மையால் நேற்றைய தினமும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.


அத்துடன், பொதுமக்களும், கலன்களுடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilankaகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.