விளாடிமிர் புடின் நாட்டின் உன்னதம் மிக்க தலைவனாக மிகச் சரியாகவே செயல்படுகின்றார்!!

 


ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் அந்த நாட்டின் உன்னதம் மிக்க தலைவனாக மிகச் சரியாகவே செயல்படுகின்றார் என்பதோடு அவர் ஒரு வல்லரசு நாட்டின் அதிபராக தன் நாட்டின் பாதுகாப்பை இக்காலத்தில் உறுதிப்படுத்தி தன் நாட்டின் எதிர்காலத்தை  மேலும் வலுப்படுத்த நினைக்கின்றார் அதில் தவறு ஏதும் இல்லை என இந்தச் சிவனடியான் கருதுகின்றேன்.


அத்தோடு 2008ல் இருந்து ரஷ்யாவை சீண்டி இழுத்து அதன் மூலம்  ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை சினப்படுத்தி உக்ரைனைக் கொண்டு இந்தப் போரை வலிந்து வரவழைத்த அமெரிக்க தலைமையிலான  இந்த சதுரங்க விளையாட்டு விளையாடும் நேட்டோ  நாடுகளே இன்றைய அவலநிலைக்கு காரணம் என இந்தச் சிவனடியான் குற்றம் சாட்டுகின்றேன். 


எனது இந்த இரு கருத்தையும் உறுதிப்படுத்த 1990 களுக்கு சற்று பயணம் செய்வோம்.


கம்யூனிச கோட்பாடுகளின் இராஜாவாக, சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியமாக இருந்த ரஷ்யா அன்று விளையாடிய இதனைப் போன்ற சதுரங்கவிளையாட்டில் அந்த ரஷ்யாவை பாதுகாக்கும் காலாற்ப் படையாக கிழக்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவேக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, யூகோஸ்லாவியா, அல்பேனியா போன்று இருந்த  கம்யூனிச நாடுகள்,

  

1990 களின் ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யா பதினைந்து நாடுகளாக பிரிவடைந்த போது,


இந்தக் காலால்படையாக இருந்த நாடுகள் யாவும் அமெரிக்காவின் கைப்பாவைகளானது. 


இதனை விட இதில் பல நாடுகள் அமெரிக்காவினால் நேட்டோ என்கிற ’வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்’ ராணுவக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டதை இந்த அமெரிக்கா ரஷ்சியா மீது  முதலில் வலிந்து ஆரம்பித்த போராகும். 


அட்லாண்டிக் கடலுக்கு சம்பந்தம் இல்லாத நாடுகளை “வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்” என இணைத்து தொடர்கதையாக ரஷ்யாவின் சினத்தை தூண்டிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அவற்றின் அடுத்தகட்டமாக, சோவியத் ஒன்றியத்திலேயே அங்கமா இருந்த ஜார்ஜியா, உக்ரைன் மாதிரியான நாடுகளை நேட்டோ கூட்டணியில் சேர்க்கும் வேலையில் இறங்கியதே இந்த போர் மூளப் பெருங்காரணமாகும்.  


ஜார்ஜியாவை விட்டாலும் பெலாரூஸ், உக்ரைன் போன்ற நாடுகளை இழப்பது என்பது உலக வல்லரசு ரஷ்யாவிற்கு அந்த நாட்டின் பாதுகாப்பை இல்லாமல் ஆக்கும் என்பதே யதார்த்தம்.  


ஆகவே 


தனது நாட்டின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்த தன் வல்லரசு தன்மையை காக்க உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்திருக்கும் இந்த போரை வழிநடத்தும் அதிபரான விளாடிமிர் புடினை இந்த சிவனடியான் பாராட்டுகின்றேன்.  


அன்பு உறவுகளே, 


இதுவரை காலமும் அமெரிக்கா நடத்திய 

ஈராக் போர், ஆப்கான் போர், வியட்னாம் போர், அத்தோடு  இந்த உலகம் கண்டும் காணமல் விட்ட ஈழப்போர் உட்பட இத்தனை கொடுமைகளும் சரியானது என்றால் விளாடிமிர் புடினின் இந்தப்போர் மிகச்சரியானதே.


-சுவாமி சங்கரானந்தா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.