முறிகண்டி விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி!!


 இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதி முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதியுள்ளது.


விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகித் தடம்புரண்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


விபத்து இடம்பெற்ற நேரத்திலிருந்து நீண்ட நேரத்தின் பின்னர் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல நோயாளர் காவு வண்டி வருகை தந்தமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.