முன்ளாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் கைது!

 


சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நான்கு பேரே இன்று (25) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் 3 கஜமுத்துக்கள் மற்றும் மாணிக்கக்கல் போன்ற கல் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.