லங்காவில் ஓடும் எங்கட வண்டி- பிறேமா(எழில்)!!

 


கடகட வண்டி மாட்டு வண்டி

காப்பெற் றோட்டில ஓடும் வண்டி 


குடுகுடு அப்புவும் ஏறி இருந்து

கெய்.. கெய் என்று ஓட்டும் வண்டி 


குளுகுளுவென்று காத்தும் வாங்கி

குடும்பம் செல்ல ஏற்ற  வண்டி 


நடநடவென்று நாம்பனை விரட்டி

நல்ல சவாரி செய்யும் வண்டி 


எடுஎடு என்று லைசன்ஸ் கேக்க

எரிச்சல் வராத இலங்கை வண்டி 


விடுவிடு டீசல் வேண்டாம் இதுக்கு

வீதி விபத்துக் குறைக்கும் வண்டி 


சரிசரியாகச் சாலையைக் கடக்கும்

சிக்னல் இல்லாச் சிக்கன வண்டி 


அடைஅடை என்று சனத்தை அடைஞ்சு

அவிஞ்சு ஊத்தாத அச்சா வண்டி 


அடஅட  அடடா அருமை வண்டி -  இனியெலாம்

அதிகமாய்க் குறையும் பலருக்கு  வண்டி


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.