சிறுவர் முன்பள்ளியின் சான்றிதழ் வழங்கும் விழா!!

 


வவுனியா வேப்பங்குளம் அல்ஹிதா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் சிறுவர் முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு நிகழ்வுகள் நேற்று (27) காலை முன்பள்ளித்தலைவர் அ.அ. ஜறூஷ் தலைமையில் இடம்பெற்றது .

முன்பள்ளி மாணவர்களின் கலை கலாச்சார நல்லுறவைப் பேணும் நிகழ்வாக இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர்களின் ஆக்கத் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் முன்பள்ளி கற்றலை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் , நினைவுக் கேடயங்கள் என்பனவும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களினால் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் கிராமத்தின் மூத்த பிரஜைகள் , பட்டாணிச்சூர் ,வேப்பங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர்கள் , சமுர்த்தி சி.பி.ஓ. தலைவர் , வேப்பங்குளம் கிராம அலுவலகர் , முன்னாள் கிராம அலுவலகர் , முன்னாள் முஸ்லிம் மகாவித்தியாலய பிரதி அதிபர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , நகரசபை உறுப்பினர்கள் , முன்பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள் , முன்பள்ளி ஆசிரியர்கள் . பெற்றோர்கள் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.