ஜனாதிபதி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்திப்பு!!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள பதினைந்து விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, பிரதி சபாநாயகர் லசந்த அழகியவன்ன ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜகத் புஷ்பகுமார, சாந்த பண்டார, சாரதி துஷ்மந்த, ஷான் விஜயலால் டி சில்வா, சாமர சம்பத் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.