துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள்!

 


டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதால், உரிய நேரத்தில் உரிய பொருட்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தும் அடிப்படையில் குறித்த பொருட்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.