குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
வவுணதீவு பொலிஸ்பிவிற்குட்பட்ட வவுணதீவு நாவக்காடு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் புஸ்பராசா இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த நபர் தனது குடம்பத்தினருடன் பிறந்த தின நிகழ்வொன்றிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் சம்பவ தினத்தன்று அன்று அதிகாலை தனது பிறிதாகவுள்ள வீட்டுக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை