இலங்கையில் மற்றுமொரு நோய் அபாயம்!!
கடந்த வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, கடந்த வாரத்தில் மட்டும் 733 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதேசமயம் அதற்கு முந்தைய வாரம் பதிவாகிய நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 19.6 வீத அதிகரிப்பாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் பதிவான டெங்கு நோயாளர்களில் 44.5% பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை