பதவி விலகினார் தோனி - ரசிகர்கள் அதிர்ச்சி!!

 


ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே தலைவர் பதவியிலிருந்து டோனி  (Dhoni)விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை டோனி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளதாகவும், தனது தலைவர்பதவியை ரவிந்திர ஜடேஜாவுக்கு (Ravindra Jadeja) தோனி (Dhoni) விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும் வீரராக அணியில் தோனி (Dhoni) தொடர்வார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள்தொடங்கியதில் இருந்தே சென்னை அணியில் விளையாடி வரும் தோனி (Dhoni)சென்னை அணியின் கேப்டனாக இதுவரையில் தனது பணியை செவ்வனே செய்துவந்தார்.

மேலும் அவர் இதுவரை சென்னை அணிக்கு நான்கு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.