உயிர் காக்கும் தலைக்கவசம் - யாழ்ப்பாண நபரின் கண்டுபிடிப்பு!!

 


தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.

30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும் கொழும்புத்துறை& பகுதியைச் சேர்ந்த எட்வின்- மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார்.

இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.அத்துடன் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை கழற்றும் போது மோட்டார் வாகனம் நின்றுவிடுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் போடாமல் ஏற்படுகின்ற மோட்டார் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காக தான் இதனை ஐந்து வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்ததாகவும் தற்போது இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாகவும் அதனை கண்டு பிடித்தவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை ஏனைய மோட்டார் வாகனங்களுக்கும் இந்த பொறிமுறையை பயன் படுத்தினால் ஓரளவிற்கு மோட்டா3ர் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.