கொழும்பு துறைமுக கப்பலில் கொக்கெய்ன் போதைப் பொருள்
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பல் ஒன்றில் கொண்டு வரப்பட்ட கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் போதைப் பொருள் தொகையை சுங்கத் திணைக்களத்தின் துறைமுகப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கொக்கேயின் தொகையின் நிறை சுமார் 350 கிலோகிராம் என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த கொக்கெய்ன் தொகையின் பெறுமதி சுமார் 6 பில்லியன் ரூபாய் எனமதிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணையில், கப்பல் இந்தியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், பழைய இரும்புகளுக்கு மத்தியில் கொக்கைன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை