இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஜெர்மன் பிரஜை கவலை!!

 


இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் நெருக்கடி ஏற்பட்டது மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கைக்கான சுற்றுலாவை விரைவில் முடிவிற்கு கொண்டுவர வேண்டியிருக்கும் என இலங்கைக்கு வந்துள்ள ஜேர்மனியைச் சேர்ந்த பிரஜை ஒருவர் தெரிவித்துள்ளமை பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த கென் என்பவரே தனது யூடியுப் வீடியோவில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்ளும்போது நீங்கள் பல சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எனத் தெரிவித்துள்ள அவர் , ஆனால் இலங்கையில் இந்தச் சவால்கள் மோசமடை கின்றதனல் நான் இங்கிருந்து வெளியேற நினைக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நிலைமை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது,நான் மாத்திரமல்ல பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதனால் நெருக்கடியில் உள்ளதாகவும் ஜேர்மனியைச் சேர்ந்த கென்ட் தனது யூடியுப்பில் தெரிவித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மடிக்கணினியை சார்ஜ் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக வைபை இல்லை,மாலை நேரங்களில் நிலைமை இன்னமும் மோசமானதாக காணப்படுகின்றது எனவும் அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் பல உணவகங்கள் இயங்க முடியாததால் மூடப்படுகின்றதாக சுட்டிக்காட்டிய அவர், என்னால் கடற்கரையில் அமர்ந்திருக்க முடியும் அது பிரச்சினையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் கென் சமூக ஊடக நிபுணராக பணியாற்றுகின்றார் என அவரது இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர் கென். நான் முறைப்பாடு செய்ய விரும்பவில்லை எனத் தெரிவிக்கும் அவர் ஏன் இலங்கையில் இவ்வாறு நடக்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் ஏன் இந்த நேரத்தில் மின்வெட்டு காணப்படுகின்றது என அறிய ஆவலாக உள்ளேன்,எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கென் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமைகுறித்து கூறியுள்ளமை பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.