சஜித் அணிக்கு அரசு கொடுத்த பதிலடி!!


 "சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணி என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்றவே முடியாது."


- இவ்வாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.


எதிரணியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எங்களுக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது:-


"அமைச்சர்களின் வீடுகளைச் சுற்றிவளைப்பதற்கு ஹிருணிகா அழைப்பு விடுத்திருந்தார். அதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையத்துக்கே சிறிய கூட்டமொன்றை அனுப்பிவைத்தோம்.

 

எதிரணியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எங்களுக்கும் பதிலடி கொடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


எதிரணி என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்றவே முடியாது" - என்றார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.