மஹாபொல கட்டணம் - மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு!!

 


மஹபொல புலமைப்பரிசில் பெற்றுக் கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் இணைப்பாளர் வசந்த முதலிகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.


அத்துடன் பல பல்கலைக்கழகங்களில் மஹாபொல தவணை கட்டணம் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.


இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்கவை தொடர்பு கொண்டு வினவியது.


இதற்கு பதிலளித்த அவர், குறித்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்ததுடன் குறித்த புலமைப்பரிசில் வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.


அதிக இசெட் வெட்டுப்புள்ளி பெற்ற மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் ஆகியோருக்கு மாற்றமின்றி மஹபொல புலமைப்பரிசில் வழமை போன்று தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.