வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா!!


புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கண்டிக்கும் வகையில், வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கிய 5 நிறுவனங்கள், தனிநபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லோய்ட் ஆஸ்டின், ஜப்பான், தென் கொரியா நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். 3 நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அவர்கள் உறுதியேற்றனர்.

‘ஹவாசங்-17’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வியாழக்கிழமை பரிசோதித்தது. அந்த ஏவுகணை அதிகபட்சமாக 6,248 கி.மீ. உயரம் வரை பறந்து 1,090 கி.மீ. தொலைவைக் கடந்து கடலில் விழுந்ததாக வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானது அதிநவீனத்துவம் கொண்டதாக அறியப்படுகிறது. அதன் மூலமாக அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் வட கொரியாவால் தாக்க முடியும். வட கொரியாவின் அணு ஆயுதத் திறனை உலகுக்கு எடுத்துரைக்கவே ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.