மின்வெட்டு அமுலாகும் அறிவிப்பு!!

 


வார இறுதி நாட்களின் மின்வெட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.


அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும், மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அத்துடன், நாளை மறுதினம் A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.


அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 4.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.