புடினுக்கு நேரடி சவால் விடுத்த எலான் மஸ்க்!! 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், டிவிட்டரில் எதிர்பாராத அளவுக்கு எலான் மஸ்க் (Elon Musk)கூறியது டிரெண்ட் ஆகி வருகிறது.

உலகமே ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், தொழில்நுட்ப உலக ஜாம்பவானும் ஆன எலான் மஸ்க்(Elon Musk), ரஷ்ய அதிபருக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார்.

ஒரு சில நாட்களுக்கு ஒரு முறையாவது உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்(Elon Musk) தலைப்பு செய்திகளில் அடிபடுவார். அதுமட்டுமின்றி, ட்ரெண்டாகும் செய்திகளில் இவர் பெயர் தவறாமல் இடம் பெற்றுவிடும். ட்விட்டரிலும் இவர் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னதாக, எலான் மஸ்க்கி(Elon Musk)ன் மகள் பெயர் தற்போது டிவிட்டரில் சென்சேஷனல் செய்தியாக ட்ரெண்டாகி வருகிறது. தற்போது மீண்டும் தலைப்புச் செய்தியில் எலான் இடம்பெற்றுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக ஏற்கனவே பல உலக நாடுகள் தங்களின் வணிகம் மற்றும் சேவையை நிறுத்திக் கொண்டதோடு, உக்ரனைக்கு நிதி உதவியும் செய்து வருகிறது. இந்நிலையில், விளாமிடிர் புடினு(Vladimir Putin)க்கு நேரடியாக ஒரே ஒரு போர் மூலம் சண்டை போட சவாலை முன்வைத்துள்ளார் எலான் மஸ்க்(Elon Musk).

அது மட்டுமின்றி, 10 வினாடிகளுக்குள் போர் முடிந்துவிடும் என்று தெரிவித்த ஒரு டிவிட்டர் யூசரின் கருத்தை ஆமோத்தித்துள்ளார். டிவிட்டர் யூசர் ஒருவர், தனது டிவீட்டில், எலான் மஸ்க்(Elon Musk) புடினை 10 வினாடிகளில் தோற்கடித்து விடுவார் என்று கூறியிருந்தார்.

புடினை விட எலான் உயரம் அதிகம் என்றும், 19 வயது இளையவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு எலான் மிகவும் சரி என்ற அர்த்தத்தில் பதில் சொல்லியிருந்தார். அதற்கு மற்றொரு யூசர், எலான் மஸ்க்(Elon Musk) கிண்டல் செய்கிறாரோ என்ற எண்ணத்தில், நீங்கள் சரியாகத் தான் சொல்கிறீர்களா என்று கேட்க, எலான் மிகவும் தீவிரமாக முடிவெடுத்ததாகக் கூறியிருந்தார்.

விளையாட்டாக இந்த டிவீட்டுகள் கருதப்பட்டாலும், எலான் மஸ்க் (Elon Musk) என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய பலம் பெற்றவர். அதை உறுதி செய்யும் விதமாக, சில மணி நேரங்களில் இணைய இணைப்பை வழங்கியுள்ளார்.

எலான் மஸ்க்(Elon Musk) சமீபத்தில் ரஷ்ய நாட்டின் படையெடுப்பிற்கு இடையில், உக்ரைன் நாட்டு ராணுவமும், மக்களுக்கும் இணைய சேவையைப் பெற உதவினார். உக்ரைன் நாட்டின் துணைப் பிரதமரின் கோரிக்கையை ஏற்று, உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் நிலையங்கள் வழங்குவதன் மூலம், எலான் மஸ்க் உலகம் முழுவதிலும் கூடுதலாக கணிசமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

எலான் மஸ்க்கின் சொந்த நிறுவனமான ஸ்டார்லிங்க் நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் மூலம், செயற்கைக்கோள் இன்டர்நெட் அக்ஸசை வழங்கி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு, உக்ரைன் அதிகாரி போர் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் தங்கள் நாட்டிற்கு ஸ்டார்லிங்க் இணைப்பை வழங்குமாறு மஸ்க்கை ஒரு டிவீட் மூலம் கேட்டுக்கொண்டார். சுமார் 10 மணி நேரத்தில், உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணைய சேவை செயல்படுத்தப்பட்டதாக மஸ்க் ட்வீட்டிற்கு பதிலளித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.