குப்பைக்குள் மூழ்கும் இலங்கை!!

 




இலங்கையை அழகாக்கி சொர்க்காபுரியாக்குவேன் என மார்தட்டிய ஜனாதிபதியால், இலங்கை குப்பைக்குள் மூழ்குவதை காப்பாற்ற முடியாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

அண்மையில் இலங்கையில் மாபெரும் பிரச்சினையாக உள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குப்பைகள் ஏற்றும் வாகனம் தனது சேவையை நிறுத்தியதால் இலங்கை தலைநகரம் கொழும்பு குப்பையால் தேங்கியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் குப்பை சேகரிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) சிரேஷ்ட உறுப்பினர் மகேந்திர டி சில்வா இன்று தெரிவித்தார்.

கங்காராம பிரதேசம், நாரஹேன்பிட்டி, பொரளை மற்றும் தெமட்டகொட பிரதேசங்களில் குப்பை சேகரிக்கும் பாரவூர்திகளில் எரிபொருள் தீர்ந்துள்ளதால் குப்பை சேகரிப்பு ஸ்தம்பிதமடைந்துள்ளதாக திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான CMC நிலைக்குழுவின் உறுப்பினர் டி சில்வா தெரிவித்தார்.

"திடக்கழிவுகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட மற்ற பகுதிகளைப் போலல்லாமல், இந்த பகுதிகளில் குப்பை சேகரிப்பு CMC மூலம் செய்யப்படுகிறது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக கொழும்பு நகரில் குப்பைகள் சேகரிக்கப்படும் போது இது இரண்டாவது தடவையாகும். மார்ச் முதல் வாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலைமை தொடருமேயானால் இலங்கை கொழும்பின் சிலபகுதிகள் மட்டுமன்றி பெருமாபாலான பகுதிகளில் குப்பைகள் தேங்கி, அதனால் நாட்டில் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் மேலோங்கும், ஏற்கனவே அதிகரித்துள்ள விலையேற்றங்களால் மருந்துவகைகளும் வாங்கமுடியாது மக்கள் அசெளகரியங்களையே ஏதிர்நோக்கவுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.