மீண்டும் மீண்டும் இலங்கை மக்களுக்கு பேரிடி!!

 


சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 30 முதல் 40 வீதம் வரை அதிகரிக்கப் பட்டதன் மூலம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியா வசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி யாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பருப்பு, சீனி, அரிசி போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று சில வர்த்தக வங்கிகள் டொலரை 290 முதல் 295 வரை உயர்த்தியுள்ளன. எனினும், எதிர்காலத்தில் இலங்கைக்கு இந்தியக் கடன் கிடைப்பதன் மூலம் டொலருக்கான தேவை குறையும் என எதிர்பார்ப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சுமார் 1,500 கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி அவற்றை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.