தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி

 


சென்னை தாம்பரம், கடப்பேரி, திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் ராகவி. இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தலைமுடியை கலரிங் செய்து கல்லூரிக்கு சென்றிருக்கிறார்.

இதைப் பார்த்த கல்லூரி நிர்வாகம் ராகவியை கண்டித்துள்ளது. இதனையடுத்து, ராகவியின் பெற்றோரை கல்லூரிக்கு வரவழைத்து இதுபோன்று உங்கள் மகளை கல்லூரிக்கு அனுப்ப வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.

இதனால், ராகவி மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாயினார். வீட்டில் யாருடன் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். கல்லூரி நிர்வாகமும், பெற்றோரும் ராகவியை கண்டித்ததால், துக்கம் தாங்க முடியாமல் நேற்று மாலை வீட்டில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ராகவி.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராகவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.