கைக்குழந்தையை கீழே படுத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் மனைவி!!

 


வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்றுமுன்தினம்  இளம் குடும்பத்தலைவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .


வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்த திருமணமாகி இரண்டு மாதம் நிறைந்த கைக்குழந்தை ஒன்றுடன் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . 


சம்பவதினம் இரவு வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற பிறந்த தின மதுவிருந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கணவருக்கு பல தடவைகள் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி வீட்டிற்கு வருமாறு அழைத்தபோதும் கணவன் வீட்டிற்கு வரவில்லை. மதுபோதைக்கு அடிமையாகிய கணவனின் நடவடிக்கையால் மனமுடைந்து ஆத்திரமடைந்த குறித்த இளம் குடும்பப் பெண் இரண்டு மாதங்கள் கடந்த தனது கைக்குழந்தையை கீழே படுத்திவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


கணவன் மதுபோதைக்கு அடிமையாகியதால் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிசாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளனர் . சடலத்தை மீட்ட பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர் .


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilankaகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.