ரஷ்ய பீரங்கிகளை துவம்சம் செய்யும் உக்ரைன்!!

 


உக்ரைனில் ரஷ்ய ராணுவம் இன்று 9 ஆவது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், நாட்டிற்குள் நுழைந்த ரஷ்ய வீரர்களின் நவீன வகை பீரங்கி டாங்கிகளை அமெரிக்காவால் வழங்கப்பட்ட சிறிய அளவில் உள்ள ஜாவ்லின் டாங்கி  (Javelin missiles) ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவத்தினர் துவம்சம் செய்து வருகின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐநா உள்ளிட்டவை கூறியும் கேட்காமல் கடந்த வாரம் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடுக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டார்.

உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சோவியத் ரஷ்யாவில் இணைக்க வேண்டும் என கண்மூடித்தனமாக ரஷ்யா போரிட்டு வருகிறது. அதற்காக விமான படை மூலம் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் வீரர்களும் ரஷ்ய ராணுவத்தினருடன் சளைக்காமல் போரிட்டு வருகிறார்கள்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும்  (Volodymyr Zelenskyy) உக்ரைனை விட்டு வெளியேற மாட்டோம். சரணடைய மாட்டோம் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று 9ஆவது நாளாக போர் நடைபெறும் நிலையில் உக்ரைனை எப்படி வீழ்த்தலாம் என ரஷ்ய பீரங்கிகள் வெடிக்கும் நிலையிலும் , அவற்றை துவம்சம் செய்து உக்ரைன் அசராமல் முன்னோக்கி சென்று வருகிறது.

இதற்கு காரணம் அமெரிக்கா கொடுத்த முக்கியதொரு ஆயுதம்தான் அங்கு கேம் சேஞ்சராக மாறியுள்ளது. அமெரிக்காவின் பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான எஃப்.ஜி.எம். 148 ஜாவ்லின்  (FGM-148 Javelin) போரில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ராக்கெட் லாஞ்சர் இது சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சர் போல எளிதில் தூக்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏவுகணைகளை ஏவி மிக துல்லியமாக ரஷ்ய டாங்கிகளை உக்ரைன் வீரர்கள் தாக்கி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 80 டாங்கிகள், 516 ராணுவ வாகனங்கள், 10 போர் விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள், 2800 ராணுவ வீரர்களை இந்த ஜாவ்லின் துவம்சம் செய்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. போரின் ஆரம்ப காலத்தில் ரஷ்யாவின் டாங்கிகள் எளிதாக நுழைந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக ஜாவ்லின் (FGM-148 Javelin)  ஏவுகணைகள் மூலம் டாங்கிகள் தகர்க்கப்படுவதால் அவை உக்ரைனுக்குள் எளிதாக செல்ல முடியவில்லை. அமெரிக்காவின் ஜாவ்லின் டாங்கியை 65 மீட்டர் முதல் 4000 மீட்டர் தூரம் வரை எறியலாம். இதன் நீளம் 1.2 மீட்டர் ஆகும். குறி வைத்து தாக்கும் ஜாவ்லின் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து துல்லியமாக தாக்கும் வல்லமை படைத்தது.

இதை பயன்படுத்துவது மிகவும் சுலபம் என்பதால் உக்ரைன் வீரர்கள் மகிழ்ச்சியிலும் தன்னம்பிக்கையுடனும் போரிட்டு வருகின்றனர். ஜாவ்லின் (FGM-148 Javelin)  மூலம் வெளியாகும் ராக்கெட்டுகள் 10 வினாடிகளில் தாக்கி அழிக்கும் வேகம் கொண்டவை என கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் உக்ரைனுக்கு மேலும் 1500 ஜாவ்லின்களை அமெரிக்கா கொடுத்து உதவி இருக்கிறது. அதேசமயம் அமெரிக்காவின் ஜாவ்லினை (FGM-148 Javelin)  உக்ரைன் பயன்படுத்தினாலும் ரஷ்யா தன்னிடம் இருக்கும் நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிமியாவுடன் ரஷ்யா இணைந்த நிலையில், அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா  (Barack Obama) பதவியேற்ற போது உக்ரைனுக்கு ஜாவ்லினை அமெரிக்கா சப்ளை செய்யவில்லை.

ஆனால் அதிபராக டொனால்ட் டிரம்ப்  (Donald Trump) பதவியேற்றவுடன் உக்ரைனுக்கு ஜாவ்லினை சப்ளை செய்யும் பணி தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.