உக்ரைன் சிறுமியின் உருக்கமான கோரிக்கை!!

 


ரஷ்யாவின் போரால் தந்தையை இழந்து, தனது ஒரு கையையும் இழந்திருக்கும் 9 வயது சிறுமி ஒருவர் பேசியிருக்கும் கருத்து பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.


உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள கீவ் நகரில் வசித்துவந்த சாஷாவின் குடும்பம் இராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக அங்கிருந்து காரில் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். அந்தக் காரை நோக்கி திடீரென்று ரஷ்ய இராணுவம் சரமாரியாகச் சுட்டதால் சாஷாவின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து சாஷாவின் தாய் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சித்தபோது சாஷாவின் கைகளை ரஷ்யாவின் துப்பாகிகள் பதம் பார்த்துள்ளன.


இதனால் நிலைகுலைந்துபோன அவர்கள் மூவரும் ஒரு பதுங்குழிக்குள் சென்று 2 நாட்களாக ஒளிந்திருந்துள்ளனர்.  துப்பாக்கி குண்டுபட்ட சாஷாவின் கைகள் காயம் காரணமாக பாதிப்பு அடைந்திருக்கிறது. இதையடுத்து பதுங்குழிக்குள் இருந்தவர்களின் உதவியோடு சாஷா ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் துப்பாக்கிச் சூடு பட்டு ஏற்கனவே 2 நாட்களை கடந்த நிலையில் சாஷாவின் ஒரு கையை மருத்துவர்கள் வெட்டியெடுத்துள்ளனர்.


இதைப்பார்த்து மிரண்டுபோன அந்தச் சிறுமி, " ரஷ்ய இராணுவத்தினர் என்னை தாக்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார்கள், இது ஒரு விபத்துதான், யாராவது பிங்க் நிறத்தில் ஓவியம் வரையப்பட்ட செயற்கை கையை எனக்குப் பொருத்த முடியுமா?" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் உலக அளவில் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.