வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

 


வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவர் இன்று அதிகாலை நேரத்தில் சிறைச்சாலையிலிருந்து தப்பித்து சென்றுள்ளதுடன் தப்பிச் சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-நிருபர்  தீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.